தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது: நீதிபதி புகழேந்தி வேதனை

சாயல்குடி: தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. லஞ்சம் வாங்குவதற்கு வெட்கப்படாத நிலையே உள்ளது என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி புகழேந்தி வேதனை தெரிவித்தார்.ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி நாகாச்சியில் ராமகிருஷ்ண மடத்தின் புதிய வளாகத்தில் சமுதாயக் கூடம், பிரார்த்தனை கூடம், சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் தலைமை வகித்தார். மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி புகழேந்தி பேசுகையில், ‘‘தற்போதைய இளைஞர்களிடையே ஒழுக்கநெறி குறைந்துள்ளது.

ஒழுக்கமற்ற சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியால் பயனில்லை. தமிழகத்தில் மேலைநாட்டு கலாச்சார மோகத்தில் இளைஞர்கள் மதுக்கடைகளை நாடும் நிலை அதிகரித்துள்ளது. லஞ்சம் வாங்குவதற்கு வெட்கப்படாத நிலையே உள்ளது. லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. லஞ்சத்துக்கு சோரம் போகும் நிலை உள்ளதை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை’’ என்றார்.

Related Stories: