சென்னை: திருச்சி- ஹவுரா- திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரயில் (02664) பிற்பகல் 1.45 மணிக்கு டிசம்பர் 1ம் தேதியும், ஹவுரா-திருச்சி இடையே வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் (02663) டிசம்பர் 3ம் தேதியும் மாலை 5.35 மணிக்கு திருச்சி, அரியலூர், விழுப்புரம், தாம்பரம், எழும்பூர், நெல்லூர் வழியாக ஹவுரா இடையே இயக்கப்படுகிறது. அதைப்போன்று சென்னை சென்ட்ரல்- கே.எஸ்.ஆர்.பெங்களூர்- சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் (06075) காலை 7.25 மணிக்கும், அதைப்போன்று கே.எஸ்.ஆர் பெங்களூர்- சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் (06076) பிற்பகல் 2.30 மணிக்கு தினமும் இயக்கப்படுகிறது.