130 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால் சென்னையில் பேனர்கள் அகற்றம்

சென்னை: நிவர் புயல் காரணமாக 120 முதல் 130 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால் சென்னையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து வகையான பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டதை தொடர்ந்து, அவை அகற்றப்பட்டது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலைக்குள் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.  மேலும் புயலின் தாக்கம் இரவு முதல் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக புயல் கரையை கடக்கும் போது 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் சென்னையில் உள்ள பேனர் மற்றும் பெயர் பலகைகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டது.

குறிப்பாக நண்பகல் 12 மணிக்குள் அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும். நீதிமன்ற அனுமதியுடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தாலும் அவசர நிலை கருதி அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கூறுகையில், சென்னையில் பேனர் வைத்துள்ளவர்கள் அனைவரும் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: