புயலின் வெளிவட்டம் கரையை தொட்டதால் பலமாக காற்று வீசுகிறது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: புயலின் வெளிவட்டம் கரையை தொட்டதால் பலமாக காற்று வீசுகிறது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் பேரிடர் மற்றும் மீட்பு பணிகள் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளார். தொடர்ந்து நொடிக்கு நொடி வெளியில் இருந்து வரும் தகவல்களை அதிகாரிகளிடமும் மாவட்ட நிர்வாகத்திடனும் பெற்று இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை இங்கிருந்தே தெரிவித்து வருகிறார். அவருடன் வருவாய் நிர்வாக ஆணையரும் உள்ளார். தொடர்ந்து அதிகாரிகளுடம் கண்காணித்து வருகின்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார்; புயலின் வெளிவட்டம் கரையை தொட்டதால் பலமாக காற்று வீசுகிறது. புயலின் ஆரம்பமான கை பகுதி புதுச்சேரியை தொட்டது. புயலால் 120 கி.மீட்டரில் இருந்து 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1, 21,000 பேர் நிவாரண முகாம்களில் ஏறத்தாழ 34,389 குடும்பங்கள், 1,370 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மக்கள் அனைவரும் இன்று இரவு வரை மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புயல் காரணமாக மரம் முறிந்து விழுந்து ஒருவர் இறந்துள்ள செய்தி மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: