புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் சென்னையில் சாலையோரம் 60 ஆண்டுகளாக வசிக்கும் 1800 குடும்பங்களின் பரிதாப நிலை: மாற்று ஏற்பாடு செய்து தராத அரசு; உயிர், உடமைக்கு பாதுகாப்பு இல்லை; அலுவலக பரணில் உறங்கும் நிரந்தர வீடு கோரிக்கை மனுக்கள்

புயல், மழை, வெள்ளம் என்று அனைத்து பேரிடர் காலங்களில் சென்னையில் 1800க்கு மேற்பட்ட குடும்பங்கள் கடும் இன்னல்களுக்கு இடையில் குடும்பங்கள் சாலையோரங்களில் வசித்து வருகின்றனர். இவர்களின் நிரந்த வீடு கோரிக்கை பல ஆண்டுகளாக நிறைவேறாமல் உள்ளது. சொந்த வீடுகள் இல்லாமல் சாலை மற்றும் தெருவோரங்களில் வசிப்பவர்கள் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகராட்சி ஆய்வு நடத்தி வருகிறது. அதன்படி, 2018ம் ஆண்டு நடத்திய ஆய்வில் 9 ஆயிரம் பேர் முக்கிய சாலை ஓரங்கள் மற்றும் தெருவோரங்களில் வசிப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து 3 கி.மீ சுற்றளவில் ஒரு வசிப்பிடங்களை (நைட்ஷெல்டர்) அமைக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பரிந்துரை செய்திருந்தனர்.

இதன்படி சென்னையில் மொத்தம் 53 வசிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆண்களுக்கு 13 வசிப்பிடங்களும், பெண்களுக்கு 8 வசிப்பிடங்களும், ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து இருக்க 1 வசிப்பிடமும், மருத்துவமனைகளில் 10 வசிப்பிடங்களும், குழந்தைகளுக்கு 9 வசிப்பிடங்களும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 13 வசிப்பிடங்களும், அறிவு வளர்ச்சி குன்றியோருக்கு 4 வசிப்பிடமும், மாற்றுத்திறனாளிகளுக்கு 2 வசிப்பிடமும் என்று மொத்தம் 53 வசிப்பிடங்கள் உள்ளது. இதில் தற்போது 1700க்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதைத்தவிர்த்து சென்னையில் 1800க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 60 ஆண்டு காலமாக சாலையோரங்களில் வசித்து வருகின்றனர். 

குறிப்பாக பெரம்பூர், பாரிஸ் கார்னர் உள்ளிட்ட இடங்களில் இந்த குடும்பங்களில் வசித்து வருகின்றனர். குறிப்பாக மழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் கடும் இன்னல்களுக்கு இடையில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மழை, வெள்ளம் மற்றும் புயல் காலங்களில் தூங்குவதற்கு இடம் இல்லாமல் பாலத்திற்கு அடியில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவர்கள் தூங்கி வருகின்றனர். வெயில் காலங்களில் இவர்களின் நிலை மேலும் பரிதாபம். இவர்களில் பலர் கடந்த 60 ஆண்டுகளாக நிரந்தர வீடு கோரி அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இது தொடர்பாக சாரசா என்பவர் அரசுக்கு எழுதிய மனுவில் கூறியிருப்பதாவது: பாரிமுனை, மண்ணடி, ராயபுரம் பகுதிகளில் 1800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இதனால் எங்களுடை குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதி இன்றி வசித்து வருகிறோம். கொரோனா காலத்தில் சாலையில் எந்த வித பாதுகாப்பும் இன்றி, கை கழுவுதற்கு வசதி இன்றி, முக்கவசம் வாங்குவதற்கு வசதி இன்றி வாழ்ந்து வருகிறோம். சுமார் 400 முதல் 500 நபர்கள் ஒரே கழிப்பறையை பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு என்ன செய்ய வேண்டும்?

* வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வசிக்கும் இடங்களுக்கு அருகில் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

* முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை வழங்க வேண்டும்.

* அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்க வேண்டும்.

* ஆதார், முதியோர், விதவை ஓய்வூதியம் பெற சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்.

* ஆய்வு நடத்துமா மாநகராட்சி?

தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்திற்கு குடிசை மாற்று வாரியம் எழுதியுள்ள கடிதத்தில் வீடற்றவர்களின் குடும்பங்கள் தொடர்பாக மாநகராட்சி ஆய்வு செய்து அளித்தால் வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: