ஏழைகளின் மருத்துவராகும் கனவை இந்தாண்டே நிறைவேற்றுங்கள்: வாய்ப்பை இழந்த மாணவர்கள் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்

சென்னை: அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தும் வறுமையால் சேர முடியாமல் போன மாணவர்கள் இந்த ஆண்டே மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் என்று உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசு ஒதுக்கீட்டு மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வறுமையால் வாய்ப்பை இழந்த தங்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க மறு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாகும். இது தொடர்பாக முதலமைச்சரிடம் மனு கொடுப்பதற்காக தலைமை செயலகத்துக்கு சென்ற தங்களை திருப்பி அனுப்பியதாக மாணவிகள் இலக்கியா, தர்ஷினி, திருவித்துள்ளனர்.

இதனை அடுத்து அந்த மாணவிகள் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிட்டனர். மாணவிகளுடன் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் மருத்துவ கனவை இந்த ஆண்டே அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதேபோன்று உடுமலைப்பேட்டையை சேர்ந்த மாணவி துல்பியா தனக்கு கோவை தனியார் மருத்துவ கல்லூரியில் கிடைத்த இடத்தை கட்டணம் கட்ட முடியாததால் இழந்ததாக வேதனையுடன் தெரிவித்தனர். கலந்தாய்வில் பங்கேற்க செல்வதற்கே மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மாணவி தங்கப்பேச்சு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என கண்ணீருடன் காத்திருக்கிறார்.

7.5% இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்பதால் அதனை கட்ட முடியாத நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பினர். தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் அறிவித்தார். கலந்தாய்வு தொடங்கிய பிறகு அறிவித்ததால் கட்டணம் செலுத்த முடியாமல் ஏழை, மாணவர்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். இவர்களது மருத்துவ கனவை இந்தாண்டே நிறைவேற்ற வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கையாகும். 

Related Stories: