மத்திய பாஜ அரசுக்கு எதிரான விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு: தொல்.திருமாவளவன் உறுதி

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனரும் தலைவருமான தொல்.திருமாவளவன் அறிக்கை: இந்தியாவில் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராக மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை எதிர்த்து, நாடு முழுவதும் வரும் 26, 27ம் தேதிகளில் தேசிய அளவில் நடைபெறும் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. முன்னதாக, 29 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்துவிட்டு, 4 தொகுப்புகளாக மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ளது. மேலும் டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த 8 மணி நேர வேலையை ஒழித்துவிட்டு, 12 மணி நேர வேலை என தொழிலாளர்களிடம் பாஜ அரசு அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது.

மேலும், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ7,500 நிவாரணம், 10 கிலோ அரிசி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26-ம் தேதி பொது வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதேபோல் புதுடெல்லியில் வரும் 27-ம் தேதி முற்றுகை போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தினரும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த 2 அறப்போராட்டங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆதரவு தெரிவிக்கிறோம். இதில் விவசாயிகள், தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கிறோம். என திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: