கொரோனாவால் நிதி நெருக்கடி 27 படங்களின் ஷூட்டிங் நிறுத்தம்

கொரோனா  பாதிப்பை தொடர்ந்து திரையுலகில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், 27 படங்கஅகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை, நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். இதில் அந்த கட்சியின் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் பொருளாளராக ஷோபா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விஜய்யின் தாயார் ஷோபா, மறுநாளே அந்த கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகி, கணவர் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

மேலும், அசோசி யேஷன் தொடங்குவதாக கூறியே, எஸ்.ஏ.சந்திரசேகரன் என்னிடம் கையெழுத்து வாங்கினார். இரண்டு முறை கட்சியின் பெயரில் கையெழுத்து கேட்டபோது மறுத்துவிட்டேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டிருந்த அறிக் கையில், ‘எனது தந்தை தொடங்கிய கட்சிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதையும் மீறி எனது பெயரை பயன்படுத்தினால், சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சந்திர சேகரன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அரசியல் கட்சி திட்டத்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கைவிட்டுள்ளார். ளின் படப்பிடிப்புகள் நடைபெறாமல் தடைபட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்துக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் 45 படங்களின் படப்பிடிப்பு நடந்து வந்தது. மார்ச் 19ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து 7 மாதங்களாக எந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இந்நிலையில், அக்டோபர் முதல் படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கியது.

ஊரடங்குக்கு முன்பு நிறுத்தப்பட்டுஇருந்த 45 படங்களின் படப்பிடிப்பும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 18 படங்களின் படப்பிடிப்புகள்தான் தற்போது நடைபெற்று வருகிறது. சில படங்களின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் பைனான்ஸ் பிரச்னையால் நிறுத்தப்பட்டு விட்டது. இதுபோல் 10க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு தொடங்கி, பிறகு நிறுத்தப்பட்டுள்ளது. பல படங்களின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலே உள்ளது. 45 படங்களில் 27 படங்களின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. ‘கொரோனா  தாக்கத்துக்கு பிறகு பல்வேறு துறைகளை போல், சினிமா துறையும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது.

நிதி நெருக்கடியில் தயாரிப்பாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். இதனால், திட்டமிட்டபடி மீண்டும் படப்பிடிப்பை தொடங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தினந்தோறும் ஊதியம் தர வேண்டும். அரங்குகளுக்கான செலவு, கேமரா வாடகை, பிற சாதனங்களுக்கான வாடகை உள்பட ஒரு நாள் படப்பிடிப்புக்கு ரூ.5 லட்சத்தில்இருந்து பல லட்சம் செலவாகிறது. கொரோனா காலத்தில் திரையுலகம் முடங்கியதால் பணத்தைப் புரட்ட முடியாத சூழல் நிலவுகிறது’ என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories: