சென்னை சென்ட்ரல், எழும்பூர் டிக்கெட் ரிசர்வேஷன் கவுன்டர் முன்பாக சிசிடிவி

சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது பயனாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே வடிவமைத்துள்ள இந்த பைபர் நெட்வொர்க் கூட்டத்தை மேலாண்மை செய்வதற்கும், உயர்தரமான மாதிரிகள் சேகரிப்பு மற்றும் சேமித்து வைத்தலை மேற்கொள்ளும்.

குற்றச்செயல்களை குறைக்க உதவும். சென்னை, சென்ட்ரலில் 10 கேமரா, எழும்பூரில் 8 கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு மேல் வீடியோக்கள் சேமிக்கப்படும். இதை தலைமை கண்காணிப்பு அலுவலர் தலைமையில் கண்காணிக்கப்படும். இந்தியாவில் சென்னை ஆறாவது மிகப்பெரிய நகரம். 4வது நகர்புற ஒருங்கிணைப்பை கொண்டது. இதனைத்தொடர்ந்து சென்னை கடற்கரை, தாம்பரம், காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், மாம்பலம், செயின் தாமஸ் மவுன்ட், பெரம்பூர், ஆவடி, மைலாப்பூர், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் சிசிடிவி கேமிரா வசதிகளை ஏற்படுத்தும் பணி நடக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: