தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம்: சி.எஸ்.ரெக்ஸ் சற்குணம், ஓய்வு பெற்ற இயக்குனர், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட 11 மருத்துவ கல்லூரிகளுக்கு முதுகலை நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதற்கு பதிலாக ‘இனி - செட்’ என்ற தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை நீட் தேர்வு வருவதற்கு முன்பு எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட அகில இந்திய மருத்துவக் கல்வி நிலையங்களில் முதுகலை மருத்துவ படிப்பில் சேர, இதற்கு முன்பாக தனித்தனியாக நுழைவு தேர்வுகளை நடத்தி வந்தன. இதனால் மாணவர்கள் ஒவ்வொரு தேர்வுக்கும் தங்களை தயார் செய்து கொண்டு தேர்வு எழுதுவார்கள்.

நீட் வந்த பிறகு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு ஒரே முதுகலை மருத்துவ நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இப்போது மீண்டும் பழையபடி தனி நுழைவு தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தற்போது உள்ள நடைமுறையின்படி முதுகலை மருத்துவ படிப்பில் சேர இரண்டு தேர்வுகளை எழுத வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட கல்லூரிகளுக்கு தனி தேர்வும், மற்ற கல்லூரிகளுக்கு முதுகலை நீட் தேர்வும் எழுத வேண்டும். தமிழகத்தில் முதுகலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இருந்தது. தற்போது அது நீக்கப்பட்டுவிட்டது. இதனால் உயர் சிறப்பு மருத்துவ படிப்பு படிப்பவர்கள் படித்து முடித்து விட்டு அவர்களது மாநிலத்துக்கு சென்றுவிடுகின்றனர்.

பலர் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். தமிழகத்திற்கு அதிக உயர் சிறப்பு மருத்துவர்கள் தேவை உள்ளது. தற்போது உள்ள மருத்துவர்கள் ஓய்வுபெற்ற பிறகு அந்த இடத்தை நிரப்ப உயர் சிறப்பு மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். எனவே பற்றாக்குறை ஏற்படும். தற்போது முதுகலை நீட் தேர்வில் ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட கல்லூரிகளுக்கு விலக்கு அளித்துள்ளது போல், நீட் தேர்வில் இருந்தும்  தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். இதன்படி பார்த்தால் தமிழத்திலும் முதலில் இருந்த நடை முறையான 12ம் வகுப்பு மதிப்பெண் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். ராய் ஆணையம் கூட இந்த கருத்தைத்தான் கூறுகிறது.

எனவே தமிழகத்திற்கு இளங்கலை நீட், முதுகலை நீட் உள்ளிட்ட எந்த தேர்வும் வேண்டாம் என்பதே எனது நிலைப்பாடு. முதுகலை நீட் தேர்வில் ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட கல்லூரிகளுக்கு விலக்கு அளித்துள்ளது போல், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். இதன்படி பார்த்தால் தமிழத்திலும் முதலில் இருந்த நடைமுறையான 12ம் வகுப்பு மதிப்பெண் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

Related Stories: