மின்வாரிய ஊழியர்களுக்கு வாரியம் திடீர் எச்சரிக்கை

சென்னை: அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மின்வாரியம்  ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பல அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அலுவலகத்திற்கு தாமதமாக  வருகிறார்கள். இது மிகவும் பொருத்தமற்றதாகும். எனவே, அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தங்களது  இருக்கையில் இருக்க வேண்டும். மேலும் அலுவலக உதவியாளர்கள், மற்ற ஊழியர்களுக்கு அனுமதிக்கப்பட்ட மணிநேரங்களை விட அரை மணி  நேரத்திற்கு முன்னதாக அலுவலகத்தில் கலந்து கொள்ள வேண்டும். ரெக்கார்ட் கிளர்க் மற்றும் அலுவலக உதவியாளர்கள், தாங்கள் பணிபுரியும்  பிரிவுத் தலைவர்களின் அனுமதியின்றி பணியில் இருந்து வெளியில் செல்லக்ககூடாது.

அதிகாரிகள் அலுவலகத்தை விட்டு செல்லும் வரை, அதிகாரிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அலுவலக உதவியாளர்கள் பணியில் இருக்க வேண்டும்.  எனவே அதிகாரிகள்/ஊழியர்கள் காலை 10.30 மணிக்குள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். வருகை கட்டுப்படுத்தும் அலுவலர்களால், காலை  10.40 மணிக்கு வருகை பதிவு முடிவு செய்யப்பட்டு விடும். இந்த அறிவுறுத்தல்களின் எந்த மீறலும் கவனமாக பார்க்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: