நாடு முழுவதும் வரும் 26ம் தேதி வேலை நிறுத்தம் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை: தலைமை செயலாளர் எச்சரிக்கை

சென்னை: நாடு முழுவதும் 26ம் தேதி நடக்கும் வேலை நிறுத்தத்தின்போது, அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து துறை செயலாளர்களுக்கு கடிதம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 26ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக மத்திய அரசு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டாலோ அல்லது அலுவலகங்களுக்கு வராமல் புறக்கணித்தாலோ அல்லது அரசு அலுவலகங்களில் பணி பாதிக்கும் வகையில் ஊழியர்கள் ஈடுபட்டாலோ தமிழ்நாடு அரசு ஊழியர்கள் 1973 விதியின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்றைய தினத்தில் சாதாரண விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பில் செல்ல அனுமதிக்கப்படாது. அன்றைய தினத்தில் விடுப்பு எடுப்பவர்களுக்கு நோ வொர்க், நோ பே என்ற அடிப்படையில் சம்பளம் மற்றும் அலவன்சுகள் பிடித்தம் செய்யப்படும். அதன்படி, வரும் 26ம் தேதி பணிக்கு வரும் ஊழியர்களின் விவரங்களை அனைத்துத்துறை செயலாளர்கள் தனித்தனியாக காலை 10.15 மணிக்குள் அறிக்கையாக அனுப்ப வேண்டும். அதில், துறையின் பெயர், மொத்த பணியிடங்கள், பணியில் இருக்கும் துறை பணியாளர்களின் விவரங்கள், பணிக்கு வந்த பணியாளர்களின் விவரங்கள், எத்தனை பணியாளர்கள் விடுமுறையில் உள்ளனர். அன்றைய தினத்தில் மட்டும் விடுப்பில் உள்ள பணியாளர்கள் விவரங்களை அறிக்கையாக சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: