உண்மை நிலையை கண்டறியும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் 4 கூடுதல் ஐஜி, 9 டிஐஜி 3 நாட்கள் ஆய்வு: ஆய்வறிக்கையை சமர்பிக்க ஐஜி சங்கர் உத்தரவு

சென்னை: உண்மை நிலையை கண்டறியும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் வரும் 25, 26, 27 ஆகிய தேதிகளில் 4 கூடுதல் ஐஜி, 9 டிஐஜி 3 நாட்கள் ஆய்வு செய்ய ஐஜி சங்கர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பதிவுத்துறை ஐஜி சங்கர் அனைத்து கூடுதல் ஐஜி, மண்டல டிஐஜி, சார்பதிவாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சார்பதிவாளர் அலுவலகங்களில் வருவாய் இலக்கு குறைவாக அடைந்த அலுவலகங்கள், பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் பதிவு செய்த அன்றே திரும்ப வழங்கப்படுகிறதா என்பதையும், நிலுவை ஆவணங்கள், களப்பணி மேற்கொள்ளப்பட வேண்டிய ஆவணங்கள், மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டிய ஆவணங்கள் குறித்து உண்மை நிலையினை அறியும் பொருட்டு கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள், மண்டல டிஐஜிக்கள் வரும் 25,26,27 ஆகிய நாட்களில் ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கையினை பதிவுத்துறை தலைவருக்கு சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சார்பதிவாளர் அலுவலகங்கள் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா எனவும், கோவிட் 19 தொற்று குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா எனவும் ஆய்வின்போது கண்காணித்திட தெரிவிக்கப்படுகிறது. இதற்காக கூடுதல் தலைவர்கள், மண்டல டிஐஜிக்கள் ஆய்வு மேற்கொள்ளும் சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை தெற்கு பதிவு மாவட்டங்களில் உள்ள 9 சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் பதிவுத்துறை தலைவர் (முத்திரை மற்றும் பதிவு), தஞ்சாவூர், திருச்சி, அரியலூர் பதிவு மாவட்டத்தில் 9 அலுவலகங்களில் கூடுதல் பதிவுத்துறை தலைவர் (சீட்டு மற்றும் சங்கம்), திருப்பூர், கோவை, சேலம் (கிழக்கு), நாமக்கல் பதிவு மாவட்டத்தில் உள்ள 9 அலுவலகங்களில் கூடுதல் பதிவுத்துறை தலைவர் (புலனாய்வு), தென்சென்னை, வடசென்னை, செங்கல்பட்டு,

வேலூர் பதிவு மாவட்டத்தில் 9 அலுவலகங்களில் கூடுதல் பதிவுத்துறை தலைவர் (வழிகாட்டி), தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட 9 அலுவலகங்களில் சென்னை துணை பதிவுத்துறை தலைவர், செய்யாறு, திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம் பதிவு மாவட்டத்தில் 9 அலுவலகங்களில் வேலூர் துணை பதிவுத்துறை தலைவர், கோபி, ஊட்டி, கோவை பதிவு மாவட்டத்தில் 9 அலுவலகங்களில் கோவை துணை பதிவுத்துறை தலைவர், கும்பகோணம், நாகை, பட்டுக்கோட்டை பதிவு மாவட்டத்தில் 9 அலுவலகங்களில் தஞ்சாவூர் டிஐஜி, கடலூர், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், மயிலாடுதுறை பதிவு மாவட்டத்தில் 9 அலுவலகங்களில் கடலூர் டிஐஜி, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் பதிவு மாவட்டத்தில் 9 அலுவலகங்களில் திருச்சி டிஐஜி, சேலம்(மேற்கு) சேலம் (கிழக்கு), தர்மபுரி,

கிருஷ்ணகிரி பதிவு மாவட்டத்தில் 9 அலுவலகங்களில் சேலம் டிஐஜி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, திண்டுக்கல், பழனி, சிவகங்கை, ராமநாதபுரம் பதிவு மாவட்டத்தில் 11 அலுவலகங்களில் மதுரை டிஐஜி, கன்னியாகுமரி, பாளையங்கோட்டை, தூத்துக்குடி, தென்காசி பதிவு மாவட்டத்தில் 9 அலுவலகங்களில் நெல்லை டிஐஜி ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்த அலுவலர்கள் சார்பதிவளர் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை பதிவுத்துறை தலைவருக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: