பாஜ அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கோவையில் இன்று ஏர் கலப்பை பேரணி: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: பாஜஅரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, கோவையில் இன்று ஏர் கலப்பை பேரணி தமிழக காங்கிரஸ் சார்பில் நடைபெறுகிறது. இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பு: மத்திய பாஜ அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக 22ம் தேதி (இன்று) பிற்பகல் 3 மணியளவில் கோவை, கருமத்தம்பட்டியில் விவசாய பாதுகாப்பு எழுச்சி மாநாடும், மாலை 5.30 மணியளவில் மாபெரும் ஏர் கலப்பை பேரணியும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை ஏற்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சிறப்புரை நிகழ்த்துகிறார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய் தத், டாக்டர் வெல்லபிரசாத் மற்றும் சசிகாந்த் செந்தில்  உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். மாநாட்டில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ்

நிர்வாகிகள் பங்கேற் கின்றனர்.

Related Stories: