சென்னையில் நாளை முதல் மின்சார ரயிலில் பெண்கள் பயணிக்கலாம்: பீக்அவர்சில் அனுமதி இல்லை

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்களுக்காக தெற்கு ரயில்வே தினசரி 244 சென்னை புறநகர் சிறப்பு மின்சார ரயில்களை இயக்கி வருகிறது. இது கொரோனா காலத்திற்கு முன் இயக்கப்பட்ட ரயில்களில் ஏறக்குறைய 40% இயக்கி வருகிறது. தற்போது 23ம் தேதி முதல் அத்தியாவசிய பணிகள் பட்டியலின்கீழ் வராத பெண் பயணிகளை சாதாரண நேரங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள்முழுவதும்  பயணிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதியளிக்கிறது.

சாதாரண நேரங்கள் என்பது காலை 7 வரையிலும், காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், மாலை 7.30 மணிக்கு பிற்பாடு உள்ள நேரங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள நேரங்களில் மட்டும் மாதாந்திர பயணச்சீட்டு அல்லது சாதாரண பயணச்சீட்டு மூலம் பெண் பயணிகள் சிறப்பு ரயிலில் பயணிக்கலாம். அத்தியாவசிய பணியாளர் பட்டியலின் கீழ் வராத பெண் பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் அதாவது காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும், திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை  பயணிக்க அனுமதி இல்லை.

Related Stories: