கடமையை செய்யாத சமூகம் உரிமையை இழந்துவிடும்: கமல்ஹாசன் பேச்சு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:18 வயது பூர்த்தி செய்த ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய கவுரவம் வாக்காளர் என்ற அடையாளம். அவனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் வாக்காளர் அடையாள அட்டை. கடமையை சரிவர செய்யாத சமூகம், தன்னுடைய உரிமைகளை தன்னால் இழந்துவிடும். மாற்றம் வேண்டும், சிஸ்டம் சரி இல்லை, எல்லோரும் திருட்டு பயல்கள் என்று கூறும் பல பேரிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை.

எந்த விஷயத்தை வேண்டாம் என்று நாம் நினைக்கின்றோமோ, எந்த விஷயம் நமக்கு சம்பந்தம் இல்லை என்று நினைக்கின்றோமோ அந்த விஷயத்தால்தான் நமக்கு ஆபத்து நிச்சயம். நாம் எல்லோருக்கும் இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள ஒரு அடையாளம், வாக்காளர் அடையாள அட்டை. நவம்பர் 21, 22 அல்லது டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் உங்கள் வீட்டின் பக்கத்தில் இருக்கும் வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு முகாம்களுக்கு சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துக் கொள்ளுங்கள். சமீபத்தில் பீகார் தேர்தலில் வெறும் 12 வாக்குகள் வித்தியாசத்தில் ஒருவர் தோல்வி அடைந்துள்ளார். முக்கியமாக, இல்லத்தரசிகளின் வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.

Related Stories: