நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வரும் சோனியா காந்தி: காற்று மாசு காரணமாக டெல்லியை விட்டு வெளியேற மருத்துவர்கள் அறிவுறுத்தல் என தகவல்

டெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக சிறிது காலம் வேறு பகுதியில் குடியேறுங்கள் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நுரையீரல் பாதிப்பு காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் அண்மையில் டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசு குறித்து அவரது மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காற்று மாசு காரணமாக சிறிது காலம் டெல்லியை விட்டு வெளியேறி வேறு பகுதியில் குடியேற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், கூறப்படுகிறது.

இதை அடுத்து கோவா அல்லது சென்னையில் குடியேற சோனியா திட்டமிட்டு வருவதாகவும், அவருடன் பிரியங்கா காந்தி அல்லது ராகுல் காந்தி உடனிருப்பார்கள் என்றும் தெரிகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: