மாணவர்கள் இடையூறால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிறுத்தம்

சென்னை: அரியர்ஸ் வழக்கு விசாரணையை காண வீடியோ கான்பரன்ஸில் ஏராளமானோர் நுழைந்ததால் இடையூறு ஏற்பட்ட நிலையில் அவ்வழக்கு விசாரணை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அணைத்தது அரியர் மாணவர்களையும் இந்தாண்டு  தேர்ச்சி என்று அறிவித்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு இன்று 26 -வது வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இது பெரும்பாலும் மதிய உணவு இடைவேளைக்கு பிறகே  எட்டப்படும் நிலையில் தான் உள்ளது. இந்நிலையில் காலை நீதிமன்றம் துடங்குவதற்கு முன்பில் இருந்தே வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மாணவர்கள் கான்பிரன்ஸின் லிங்கை இணையத்தின் மூலம் எடுத்து 300 -க்கும் மேற்பட்டோர் லாகின் செய்துள்ளனர். இதனால் வழக்கறிஞர்கள் ,செய்தியாளர்கள், மாணவர்கள் என 350 -க்கும் மேற்பட்டோர் உள்நுளைந்துள்ளனர்.

மேலும் மாணவர்கள் தங்களது கைபேசியில் மியூட்  செய்யாமல் இருப்பதால் மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது, குழந்தைகள் அழுவது போன்ற சப்தம் நீதிமன்ற பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக நீதிபதிகள் எச்சரித்தனர். இருப்பினும் இடையூறு சப்தங்கள் ஓயவில்லை. அதனால் நீதிபதிகள் அந்த வழக்கு விசாரணையை நிறுத்திவிட்டு,முறையீடு நேரத்தையும் தவிர்த்துவிட்டு, வேறு எந்த வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நீதிமன்றத்தை விட்டு இறங்கியுள்ளார்கள்.

இதன்பிறகு வழக்கறிஞர்கள் மூலம் தேவையற்றோரை வெளியேறும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பின்னும் மாணவர்கள் வெளியேறாத காரணத்தால் நீதிமன்ற பணியாளர்களை வைத்து தேவையற்றோரை வெளியேற்றும்பணி நடைபெற்று வருகிறது. இந்த நடைமுறை முடிந்த பிறகு வழக்கமான முறையில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அரியர் மாணவர்களை தேர்ச்சியடைய செய்ததை எதிர்த்து போடப்பட்ட வழக்கு மதியம் 2 மணிக்கு மேல் விசாரணைக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிமுகமாகவுள்ளது.

Related Stories: