சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் கோரிக்கை வைத்தது. இதை பரிசீலித்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கடந்த 2016-17ல் இருந்து 2018-19வரை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் யூனிட்டுக்கு 7.11 முதல் 8.15 வரை வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டணம் யூனிட்டுக்கு 7.03 என குறைக்கப்பட்டுள்ளது.சராசரி கட்டணத்தைவிட குறைந்த கட்டணமே மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் வசூலிக்கப்படுகிறது. மேலும், ரயிலை இயக்குவதற்கு மட்டுமல்லாமல், சாலைகள் இணைப்பு, ரயில் தண்டவாளம் இல்லாத இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.