பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வௌியில் வந்தாலும் அதிமுகவில் மாற்றம் ஏற்படாது: கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

கோவை: பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியில் வந்தாலும் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோைவ வந்தார். அவருக்கு, மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பீளமேடு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி:மருத்துவ மாணவர் ேசர்க்கையில், மத்திய அரசின் நீட் தேர்வினால் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதால், 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம், இன்று 313 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை முன்பைவிட அதிகம்.  இது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்தியாவில் நீட் தேர்வை எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது. பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகி ெவளிேய வந்தாலும், அ.தி.மு.க.வில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விளையாட்டை தடை செய்யவேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வருகின்றன. தடை செய்ய அரசு தயாராக உள்ளது. இருப்பினும் இது தொடர்பான சட்டத்தை மத்திய அரசுதான் இயற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பின்னர் காரில் சேலம் புறப்பட்டு சென்றார்.

Related Stories: