பீகார் சட்டப்பேரவையில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏ கூட இல்லாத தேஜ கூட்டணி

பாட்னா: பீகார் சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 125 எம்எல்ஏ.க்கள் இருந்த போதிலும் கூட, அதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தள த லைவர் நிதிஷ்் குமார் தலைமையில் போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இம்மாநில முதல்வராக தொடர்ந்து 4வது முறையாக, நிதிஷ் பதவியேற்றுள்ளார். அவருடன் 2 துணை முதல்வர்கள் உட்பட 14 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதனை தொடர்ந்து, முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 23ம் தேதி கூடுகிறது.  இந்நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இம்முறை 125 எம்எல்ஏ.க்கள் இருந்த போதிலும், அதில்  ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.  மேலும், இந்திய வரலாற்றில் முதல் முறையாக பீகார் மாநில அமைச்சரவையில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த யாரும் இப்போது இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இதற்கு முன்னதாக, இம்மாநிலத்தின் முதல் முதல்வர் கிருஷ்ண சின்கா தொடங்கி, தற்போதைய சட்டப்பேரவைக்கு முன்பாக முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி செய்த அமைச்சரவையில் கூட, குறைந்தபட்சம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.  ஐக்கிய ஜனதா தளம், பாஜ, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா, விகாஷீல் இன்சான் கட்சி ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளன. இந்த தேர்தலில், பாஜ, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா, இன்சான் கட்சிகள் சார்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட நிறுத்தப்படவில்லை. ஆனால், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 11 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. கடந்த 2015ம் ஆண்டு அமைக்கப்பட்ட 16வது சட்டப்பேரவையில் 24 இஸ்லாமிய எம்எல்ஏ.க்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 19 ஆக குறைந்துள்ளது. இவர்கள் கூட, ராஷ்டரிய ஜனதா த ளம், காங்கிரஸ் மற்றும்  ஓவைசி கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை அமைச்சர்

ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஆட்சிக்கு வந்ததும் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை அளிப்பதாக நிதிஷ் குமார் கூறினார். ஆனால், தனது அமைச்சரவையில் ஊழல்வாதிகளுக்கு பதவி அளித்துள்ளார். 2017ம் ஆண்டு பகல்பூர் வேளாண் கல்லூரியில் துணை வேந்தராகப் பணியாற்றியபோது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் மேவலல் சவுத்ரி. அதற்காக அவர் மீது விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. இப்படிப்பட்டவர், தற்போது கல்வி அமைச்சராகி உள்ளார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: