ஜெயலலிதா நினைவிடத்திற்கு பராமரிப்பு, மின் நுகர்வு கட்டணங்களுக்காக மேலும் ரூ.21.79 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கியது தமிழக அரசு

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்திற்கு ரூ.21.79 கோடி கூடுதல் நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. 5 ஆண்டு பராமரிப்பு, மின் நுகர்வு கட்டணங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.57.96 கோடி ஒதுக்கிய நிலையில் அருங்காட்சியகம், பராமரிப்புக்கு மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜிஆர். நினைவிட வளாகத்தின் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு 2017 ஆண்டு ஜுன் மாதம் தெரிவித்திருந்தது. கடந்த 2020 ஜூலை மாதத்தில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளுக்கு கூடுதலாக 7 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது.

ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டுவதற்காக சுமார் ரூ.50.80 கோடியில் அளவில் டெண்டா் விடப்பட்டிருந்தது. இதைத்தொடா்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு மே மதம் 7-ம் தேதி  காலையில் மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் மண்டபம் கட்டுவதற்கான அடிக்கலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாட்டினார். நினைவிடத்தில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், புகைப்படம் மற்றும் வீடியோ கண்காட்சி அரங்கம், ஒலி, ஒளி வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. தற்போது பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: