அரசு அனுமதி வழங்காத நிலையில் பாஜ தினமும் தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்துவது எப்படி? முத்தரசன் கேள்வி

திருத்துறைப்பூண்டி, : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாக செயல்படுகிறார். உடனடியாக அவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும்.பாஜ சார்பில் நடத்தப்படும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு நீதிமன்றத்தில் அனுமதி வழங்கவில்லை.

ஆனால் ஒவ்வொரு நாளும் யாத்திரை நடைபெற்று வருகிறது. தமிழக போலீசார் கைது செய்து விடுதலை செய்வது என்ன நாடகம் என்று புரியவில்லை. எடப்பாடி அரசும், மோடி அரசும் இரட்டையர்களாக சேர்ந்து கொண்டு செயல்படுவது கண்டிக்கதக்கது.

ஒரு அகில இந்திய கட்சி, சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு பணிய வேண்டும். மாநில அரசு உத்தரவுக்கு பணிய வேண்டும். ஜனநாயகத்துக்கு எதிரான எதேச்சாரிகார, சர்வாதிகார, பாசிஸ்ட் கட்சியாக பாஜக இருக்கிறது. இதனை தோழமை கட்சிகளுடன் எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: