மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி:கட்-ஆப் 80 முதல் 90 மதிப்பெண்கள் வரை உயர்வு

சென்னை: மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் விளைவாக நீட் நுழைவுத் தேர்விர்க்கான கட்-ஆப்  மதிப்பெண்கள் 80 முதல் 90 வரை அதிகரித்துள்ளது. மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

இதில் 601 நீட் மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பொதுப்பிரிவு மாணவர்கள் 940 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 560 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 1430 மாணவர்கள் உள்ளனர் . 526  மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட 750 மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் உள்ளன. தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களுக்கான கட்-ஆப் 453 ஆகவும், பழங்குடியினருக்கான கட்-ஆப் 348 ஆகவும் இருக்கிறது.

இது கடந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான கட்-ஆப் மதிப்பெண்களை விட அதிகம் என்பதால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றான். நீட் தேர்வை புதிதாக எதிர் கொள்ளும்  மாணவர்களை விட ஏற்கனவே நீட் தேர்வில் தோல்வியுற்ற பழைய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக  இருப்பது மற்றும் நீட் தேர்வு எளிமையாக இருந்ததுமே இந்த ஆண்டு கட்-ஆப் அதிகரிக்க காரணம் என்றும், மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்பட்டு பல்வேறு பயிற்சி மையங்களில் பயிற்சிகள் மேற்கொள்ளுவதும், ஒவ்வொரு ஆண்டும் அதிக மாணவர்கள் தேர்ச்சியடைவதுமே கட்-ஆப் அதிகரிக்க காரணம் என்று கல்வியாளர்கள் கருத்தது தெரிவிக்கின்றனர்.

 பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆப் 2019-ம் ஆண்டில்  520, 2020-ம் ஆண்டில் 601, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கட்-ஆப் 2019-ம் ஆண்டில் 470, 2020-ம் ஆண்டில் 560 ஆக உள்ளது. நீட் தேர்விற்க்கான கட்-ஆப் இந்தாண்டு 80 முதல் 90 மதிப்பெண்கள் வரை உயர்ந்துள்ளது.

Related Stories: