தமிழகத்தில் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் பணியாற்றும்..!! காங்கிரஸின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் பேட்டி

சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதைக் கண்டறிந்து வருவதாகவும், பேரம் பேச மாட்டோம் எனவும், அகில இந்திய காங்கிரஸின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. இதற்கான வேலைகள் குறித்து தற்போதே விவாதங்கள் எழ ஆரம்பித்து விட்டன. கூட்டணி, ஆட்சி குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

இது குறித்து அவர் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்துக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளைக் கட்சி தொடங்கியுள்ளது. வலுவான மற்றும் நல்ல வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆலோசனையும் தொடங்கியிருக்கிறது. நாங்கள் அதை முக்கியமான, நடைமுறை கோணத்தில் பார்க்கிறோம். தொகுதிவாரியாக உள்ள எதார்த்தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மற்ற விசயங்களைவிடக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம். இவ்வாறு தினேஷ் குண்டு ராவ் தெரிவித்தார். தமிழகத்தில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும், வாக்கு வித்தியாசம் குறையும் போது திமுகவுக்கு காங்கிரஸால் வலுவூட்ட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். 

Related Stories: