நகர்புறங்களில் உள்ள சாலைகளை சீரமைக்க 1000 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது : தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டங்கள், கழிவு நீர் கால்வாய் பணிகள், மற்றும் இயற்கை பேரிடர்களால் சாலைகள் சேதமடைகிறது.   இவ்வாறு சேதமடைந்த சாலைகளை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுகிறது.

இதன்படி  இந்த ஆண்டில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 4 ஆயிரத்து 376 கி.மீ நீள சாலை மேம்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த  பணிகளுக்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: