சூரப்பா மீதான புகார்கள் மடியில் கனமில்லை என்றால் பயப்பட தேவையில்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை:  முன்னாள் பிரதமர் நேருவின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் கிண்டி கத்திபாராவில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழக அரசின் சார்பாக  அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன், பென்ஜமின் ஆகியோர் நேருவின் சிலையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு  மலர்தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி:   தமிழகத்தில் தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டில் உள்ளது. இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.  கொரோனா காலம் என்ற அடிப்படையில்தான் வேல் யாத்திரைக்கு அரசு தடை விதித்தது.

சூரப்பா விவகாரத்தில் மடியில் கனம் இல்லை என்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுப்பது தான் நியாயம்.  அதை தவிர்க்க கூடாது.  புகார்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவே குழு அமைக்கப்பட்டுள்ளது.அதிமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. அதிமுக கொள்கை வேறு. பாஜ கொள்கை வேறு.   இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதி பூங்காவாக திகழ்கிறது. நடிகர் கமலஹாசன் கொரோனாவிற்கு பயந்து வீட்டில் இருந்து கொண்டு அறிக்கை விட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: