மகாராஷ்டிர மாநிலத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் வருகிற 16-ந்தேதி முதல் திறப்பு; மாநில அரசு அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் வருகிற 16-ந்தேதி முதல் பக்தர்களுக்கான திறக்கப்படும் என மராட்டிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாக இருந்தது. தினந்தோறும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க கொரோனா வைரசின் தாக்கம் குறைய ஆரம்பித்தது. மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அளித்தாலும் மராட்டிய அரசு அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை. 2-வது அலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கவனமான இருந்தார். பல்வேறு தரப்பில் இருந்து நெருக்கடி ஏற்பட்ட போதிலும் தனது முடிவில் உறுதியாக இருந்தார். தற்போது மராட்டியத்தில் கொரோனா தொற்கு மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது.

இந்நிலையில் வருகிற 16-ந்தேதி முதல் (நாளைமறுநாள்) அனைத்து மத வழிபாட்டு தலங்களை பக்தர்களுக்காக மீண்டும் திறக்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. முகக்கவசம் கட்டாயம், அனைத்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

Related Stories: