நவ.16ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவர உள்ள நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை!

சென்னை: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவர உள்ள நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனையானது நடைபெற்று கொண்டிருக்கிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாகவே பலகட்டங்களாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், இறந்தவர்களை பட்டியலில் இருந்து நீக்குவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக கலந்து ஆலோசித்த பின்பு, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலும், தொடர்ந்து அடுத்தாண்டு ஜனவரி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இது குறித்து தற்போது ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நவம்பர் 1ம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பாக ஆன்லைன் மூலம் 3 லட்சத்து 48 ஆயிரத்து 512 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு 2 லட்சத்து 44 ஆயிரத்து 808 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவை அனைத்தும் பரிசீலனை செய்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவிருக்கிறது. மேலும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடனான ஆலோசனை கூட்டத்தையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மேற்கொண்டார். தொடர்ந்து, புதிய ஏஜெண்டுகளை நியமிப்பது, இரட்டை பதிவுகளை நீக்குவது உள்ளிட்ட விவரங்கள் குறித்த ஆலோசனையும் நடைபெற்றது. இந்த நிலையில், நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவிருக்கிறது.

Related Stories: