கடல் சீற்றத்துடன் காணப்படும் நேரத்தில் கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகளை தடுக்க வேண்டும்: நாகூர் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

நாகை: கடல் சீற்றத்துடன் காணப்படும் நாகூர் கடற்கரையில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகளை தடுக்க  போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததை தொடர்ந்து பொது இடங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க  தொடங்கியுள்ளது. இதன்படி புகழ்பெற்ற நாகூர் தற்காவிற்கு வெளி மாநில, மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தினமும் வருகை  தருகின்றனர். இந்நிலையில் நகூர் தர்கா வரும் சுற்றுலா பயணிகள் கடல் சீற்றத்துடன் காணப்படும் நாகூர் கடற்கரையில்  ஆபத்தை உணராமல் குளித்து கும்பாளம் போடுகின்றனர்.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து  வரும் பக்தர்கள் குழந்தைகளுடன் ஆபத்தை உணராமல் கடலில் நீண்ட தூரத்திற்கு சென்று குளிப்பது அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடல் அலையில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள்  வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆபத்தை உணராமல் கடலில் குளிப்பவர்களை தடுக்க நாகூர் கடற்கரையில் கடலோர  காவல் குழும போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: