குமரி: காதல் வலையில் விழ வைத்து பல பெண்களை ஏமாற்றிய மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட காசியிடம் இருந்து மீட்கப்பட்ட லேப்டாப்பில் ஏராளமான வீடியோக்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சுமார் 1000க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பல பெண்களை இணையத்தின் வாயிலாக ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட காசியிடமிருந்து லேப்டாப் பை கைப்பற்றப்பட்ட நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி. சமூக வலைத்தளத்தில் பல பெண்களை காதலிப்பது போன்று நடித்து ஆபாச படங்களை எடுத்து மிரட்டியதாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, 5 பெண்கள் காசி மீது புகாரளித்தனர்.