அமைப்பு நாடுகள் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஒரு நாட்டில் தனிப்பட்ட விவகாரத்தை பற்றி பேசுவது தேவையற்றது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர மாநாடு காணொலி வாயிலாக நடைபெறுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புகளுடன் இந்தியா வலுவான கலாச்சார மற்றும் வரலாற்று வரப்புகளை கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்தியா, அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகியவற்றை கடுமையாக நம்புகிறது, பயங்கரவாதம், சட்டவிரோத ஆயுதக் கடத்தல், போதைப்பொருள் மற்றும் பணமோசடி ஆகியவற்றிற்கு நாங்கள் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். எஸ்சிஓ சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின்படி எஸ்சிஓவின் கீழ் பணியாற்றுவதற்கு இந்தியா உறுதியாக உள்ளது. மேலும் அமைப்பு நாடுகள் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறிய அவர்; மாநாட்டில் இந்தியாவிற்கு தனிப்பட்ட பிரச்சனையாக உள்ளஇரு தரப்பு பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிப்பது தேவையற்றது என தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி இவ்வாறு கூறியிருப்பதால் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் லடாக் எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட மாட்டாது என தெரிகிறது.

Related Stories: