நாளை முதல் தீபாவளி சிறப்பு பஸ் சொந்த ஊர் செல்ல 55 ஆயிரம் பேர் முன்பதிவு: பயணிப்போர் எண்ணிக்கை பாதியாக குறைந்தது: நெரிசலை தவிர்க்க 5 பேருந்து நிலையம்

சென்னை: தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் நாளை முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இவற்றில் பயணிப்பதற்காக நேற்று வரை 55 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் வரும் 14ம் தேதி தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  சென்னையில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்சி உள்பட சொந்த மாவட்டங்களுக்கு பலர் செல்வது வழக்கம். இவர்களுக்காக ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அந்தவகையில் நாளை (11ம் தேதி) முதல் 13ம் தேதி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தீபாவளி  பண்டிகையொட்டி பயணிப்பதற்காக நாளை 8,336 பேரும், நாளைமறுநாள் 18,153பேரும், 13ம் தேதி  10,700 பேரும் என மொத்தமாக 37,189 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.

இதில்,  சென்னையில் இருந்து பயணிப்பதற்காக மட்டும் 11ம் தேதி 4,779 பேரும், 12ம்  தேதி 12406 பேரும், 13ம் தேதி 6,258 பேரும் என மொத்தமாக 23,443 பேரும்  முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு மொத்தமாக 96 ஆயிரம் பேரும்,  சென்னையில் இருந்து பயணிப்பதற்காக 49 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்து  பயணித்திருந்தனர். இதேபோல் தீபாவளிப்பண்டிகை முடிந்து  திரும்புவதற்கு 15ம் தேதி 9,638 பேரும், 16ம் தேதி 6,003 பேரும், 17ம் தேதி  1,933 பேரும் 18ம் தேதி 818பேரும் என மொத்தமாக 18,392 பேரும் முன்பதிவு  செய்துள்ளனர். இதுவரை மொத்தமாக 55,581பேர் முன்பதிவு செய்துள்ளனர்.  தொடர்ந்து முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளை (இன்று) அதிகரிக்க  வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முன்பதிவு செய்து  பயணிப்போரின் குறைவாகவே இருக்கிறது. இதற்கு கொரோனா பரவல் காரணம். பயணிகள் எண்ணிக்கை எவ்வளவு  உயர்ந்தாலும், அதற்கு தகுந்தார்போல் இயக்குவதற்கு ேபாதுமான பஸ்கள் தயார்  நிலையில் உள்ளன. ெபாதுமக்கள் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை  பின்பற்றி பயணிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ெநரிசலை குறைக்க: முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு  பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிச் சுற்றுச்சாலை வழியாக வண்டலூர்  சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று  தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த  பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கார்  மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது  பெரும்புதூர் - செங்கல்பட்டு  வழியாக செல்ல வேண்டும்.

ஐந்து இடங்களில் இருந்து பஸ் இயக்கம்

* மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து,

செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

* கே.கே. நகர் எம்டிசி பேருந்து நிலையத்தில் இருந்து ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

* தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

* தாம்பரம், ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

* பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

* கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

Related Stories: