சின்னசேலத்தில் இருந்து தனி சரக்கு ரயிலில் ஆந்திராவிற்கு 81 நெல் அறுவடை இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

சேலம்: சின்னசேலத்தில் இருந்து தனி சரக்கு ரயிலில் ஆந்திராவிற்கு 81 நெல் அறுவடை இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சின்னசேலத்தில் இருந்து நெல் அறுவடை இயந்திரங்களும், கரூரில் இருந்து கொசு வலைகளும், சேலத்தில் இருந்து ஆவின் பாலும் பல்வேறு மாநிலங்களுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் 6வது முறையாக சின்னசேலத்தில் இருந்து நெல் அறுவடை இயந் திரங்கள், நேற்று தனி சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் நடந்து வரும் நெல் அறுவடை பணிக்காக, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 32 வேகன் கொண்ட சரக்கு ரயிலில், 81 எண்ணிக்கையில் நெல் அறுவடை இயந்திரங்கள் ஏற்றப்பட்டன. பின்னர், அந்த சரக்கு ரயில் ஆந்திராவில் உள்ள எலுரு ரயில்வே ஸ்டேஷனுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த இயந்திரங்களை அனுப்பியதன் மூலம், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு ₹10.40 லட்சம் வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: