தடுப்பூசியால் மட்டுமே கொரோனா ஒழிந்துவிடாது...!! தடுப்பூசி இயல்பாகக் கிடைக்க ஓராண்டு காத்திருக்க நேரலாம்; எய்ம்ஸ் இயக்குனர் கருத்து

டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பூசி இயல்பாகக் கிடைக்க மேலும் ஓராண்டு காத்திருக்க நேரலாம் என்று எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85,07,754 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 559 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,26,121 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்திய மக்கள் தொகையை கருத்தில் கொண்டால், 2022ஆம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி இயல்பாக கிடைக்கும் என்று  தேசிய கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர் குழுவில் உறுப்பினரும், எய்ம்ஸ் இயக்குனருமான டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் தடுப்பூசி இயல்பாகக் கிடைக்க மேலும் ஓராண்டு காத்திருக்க நேரலாம்.

தடுப்பூசி போடுவதால் மட்டுமே கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழிந்துவிடாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைத்த பிறகு இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்டபோது, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடையும் வகையில் தடுப்பூசியின் விநியோகம் இருக்கும் என்று கூறினார். மேலும் போதுமான சிரிஞ்சுகள், போதுமான ஊசிகள் வைத்திருப்பது மற்றும் நாட்டின் தொலைதூர பகுதிக்கு தடையின்றி அதை வழங்குவது மிகப்பெரிய சவாலாகும்” என்றும் அவர் கூறினார்.

Related Stories: