அரசு அலுவலகங்களில் சோதனை ₹4.29 கோடி ரொக்கம், 519 சவரன் தங்கம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கியதாக 4.29 கோடி ரொக்கம், 519 சவரன் தங்கம், வெள்ளி 6.5 கிலோ பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.  இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட அறிக்கை:  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் உத்தரவின்படி அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை 54 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட  சோதனையில்  கணக்கில் காட்டப்படாத  4,29,98,892 ரொக்கம், தங்கம் 519 சவரன், வெள்ளி 6.5 கிலோ வங்கி இருப்பு விவரங்கள் மற்றும் ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டது.

அதைப்போன்று தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்ட அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இதுவரை 16 பேர்  லஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ₹94,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: