ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலக வளாகத்தில் புரோக்கர்கள் பிடியில் சிக்கியுள்ள ஆதார் இசேவை மையம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் வல்லம், சுங்குவார்சத்திரம், மதுரமங்கலம், தண்டலம் ஆகிய 5 குறுவட்டங்களில் 58 ஊராட்சிகள் அடங்கியுள்ளன. இங்குள்ள பொது மக்கள், புதிய ஆதார் அட்டை, பெயர் சேர்த்தல், திருத்தம் உள்பட பல்வேறு பணிகளுக்கு ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் இசேவை மையத்துக்கு வருகின்றனர். தற்போது ஸ்ரீபெரும்புதூர் ஆதார் சேவை மையத்தில் புரோக்கர்கள்  மூலம் கையூட்டு பெற்று உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பணம் கொடுக்காதவர்களின் விண்ணப்பங்களை அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.மேலும் இசேவை மையத்திற்கு வரும் பொது மக்களிடம், ஊழியர்கள் அவதூறான வார்த்தைகள் பேசுவதாகவும், இதனால் பொது மக்கள் மன உலைசலுக்கு ஆளாகி வருகின்றனர் என குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆதார் அட்டை குறைபாடுகளை சரிசெய்ய, ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் இசேவை மையத்தை நாடுகின்றனர். பொது மக்கள் நேரடியாக சென்று விண்ணபித்தால், குறிப்பிட்ட தேதியில் மீண்டும் வர சொல்லி அனுப்புகின்றனர். ஆனால், அதே பகுதியில் சுற்றி திரியும் புரோக்கர்கள் மூலம் சென்றால், ஒரு மணி நேரத்தில் ஆதார் அட்டையில் உள்ள குளறு படிகளுக்கு தீர்வு கிடைக்கிறது. இதற்காகவே, ஆதார் இசேவை மையத்தை சுற்றி 20க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் வருகின்றனர். அவர்கள், 700 முதல் 1000 வரை வசூல் செய்கின்றனர். எனவே ஆதார் சேவை மைய ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். புரோக்கர்கள் அட்டகாசத்தை ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்து கின்றனர்.

Related Stories: