டாஸ்மாக் கடையில் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ்: நிர்வாக இயக்குனர் அறிவிப்பு

சென்னை: டாஸ்மாக் கடையில் பணியாற்றும் சி, டி பிரிவு பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் 10 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில தமிழக அரசின் உத்தரவுபடி டாஸ்மாக் நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி 8.33 சதவீதம், கருணை தொகை 1.67 சதவீதம் என மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும். டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைத்து சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.8400 வரை வழங்கப்படும். இந்த போனஸ் தொகை உடனடியாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும், எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது என்ற விவரத்தை 7ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: