தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் தலைமையகத்தில் சிறப்பு வகை இனிப்புகள் விற்பனை துவக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் தலைமையகத்தில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனையை பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார். ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.இந்நிலையில்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகளான ஸ்டப்டு டிரை ஜாமுன்(250 கி) -  190, நட்டி மில்க் கேக் (250 கி) - 190, ஸ்டப்டு மோதி பாக் (250கி)  - 170, காஜு பிஸ்தா ரோல்(250 கி) - 225, காபி பிளேவர்டு மில்க் பர்பி (250 கி) - 165,

நெய் முறுக்கு மற்றும் மேற்கண்ட 5 வகையான  இனிப்புகள் அடங்கிய காம்போ பேக் (500 கி) - 375 ஆகியவற்றின் விற்பனையை துவங்கியுள்ளது. மேலும் தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகள் ஸ்விகி, சொமாட்டோ மற்றும் டன்சோ போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மூலமாகவும் நுகர்வோர் இல்லங்களுக்கே சென்று விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை துவக்க நிகழ்ச்சியில் பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கோபால் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் வள்ளலார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: