பிரதமருடன் ஆளுநர் பன்வாரிலால் திடீர் சந்திப்பு

சென்னை:  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று திடீரென டெல்லி வந்தார். நேற்று மாலை அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் 40 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம், கொரோனா பாதிப்புகள், மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கேட்டு அனைத்து கட்சிகளும் வைத்துள்ள கோரிக்கை, ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர்  விடுதலை உட்பட தமிழகம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை பற்றி மோடியிடம் விளக்கியதாக தெரிகிறது. பின்னர், இப்பிரச்னைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அவர் சந்தித்தார். இன்று அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

அப்போது, தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கலந்தாய்வின் போது 7.5 சதவீத உள் இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கியது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிக்கையையும் ஜனாதிபதியிடம் அவர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தவிர ஏழு பேர் விடுதலை தொடர்பாகவும் பேசுவார் என தெரிகிறது.

Related Stories: