பெங்களூரில் மோசமான வானிலை 6 விமானங்கள் தாமதம்

மீனம்பாக்கம்: பெங்களூரில் மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய ஒரு விமானம் மற்றும் பெங்களூரில் இருந்து வர வேண்டிய 2 விமானங்கள் தாமதம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து இன்று காலை 7.20 மணிக்கு பெங்களூர் செல்ல வேண்டிய தனியார் விமானம் 56 பயணிகளுடன் புறப்பட தயாரானது. ஆனால் பெங்களூரில் மோசமான வானிலை காரணமாக, விமானம் புறப்படவில்லை. இதையடுத்து, வானிலை சீரடைந்து விட்டதாக தகவல் கிடைத்ததும் ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை 8.20 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. அதே போல பெங்களூரில் இருந்து சென்னை வரவேண்டிய 2 விமானங்களும் மோசமான வானிலையால் தாமதமாக வந்தன.

அதே போன்று லண்டனில் இருந்து 166 பயணிகளுடன் பெங்களூர் சென்ற பிரிட்டீஸ் ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து 81 பயணிகளுடன் பெங்களூர் சென்ற தனியார் விமானம், சென்னையில் இருந்து 137 பயணிகளுடன் பெங்களூர் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பெங்களூரில் மோசமான வானிலை காரணமாக இன்று காலை சென்னையில் தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர

வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு ஏற்பாடுகளை அந்தந்த விமான நிறுவனங்கள் செய்து கொடுத்தன. வானிலை சீரடைந்ததும் விமானங்கள் புறப்பட்டு சென்றது.

Related Stories: