கர்நாடக இசை கலைஞர் டி.என். கிருஷ்ணா மறைவு: பிரதமர், ஆளுநர் இரங்கல்

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணா மரணமடைந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பத்மபூஷன், பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலைசிகாமணி, சங்கீத கலாநிதி விருது என இசைத் துறையில் பல்வேறு விருதுகளை பெற்றவர் கிருஷ்ணா. கர்நாடக இசைத் துறையில் குறிப்பாக வயலின் இசைக் கலைஞராக அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நிலைத்து நிற்கும். சென்னை இசைக்கல்லூரி பேராசிரியராகவும், டெல்லி பல்கலைகழகத்தின் இசை மற்றும் கவின் கலை பள்ளி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 2018ம் ஆண்டின் ராஜ்பவனின் உயர்ந்த விருதையும் அவருக்கு அளித்துள்ளேன்.

அந்த தருணம் மறக்க முடியாதது. அவருடைய மறைவு இந்தியாவிற்கு மட்டுமன்றி உலகமெங்கும் உள்ள கர்நாடக இசை பிரியர்களுக்கும் பேரிழப்பாகும். இத்தருணத்தில் அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திகிறேன். ஈடு செய்ய இயலாத பேரிழப்பிலிருந்து அவருடைய குடும்பம் மீண்டு வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங் கல் செய்தியில், டி.என்.கிருஷ்ணா இளம் கலைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார் என்று புகழாரம் சூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: