தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்திப்பு

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்து பேசினார். மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சந்தித்து பேசியுள்ளார். தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்திக்கிறார். மேலும் இந்த சந்திப்பின்போது சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: