காவிரி மேலாண்மை கூட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டி: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இணையம் வழியாக கடந்த வாரம் நடந்தது. அக்கூட்டத்தில் ஆணையத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட காவிரி சரபங்கா திட்டம் குறித்தான விளக்க கலந்துரையாடலில் பங்கேற்ற கர்நாடக அதிகாரிகள் சரபங்கா திட்டத்தை சட்டவிரோதமாக செயல்படுத்தி புதிய நீர்ப்பாசன பகுதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு சட்டவிரோதமாக ஈடுபடுகிறது என குற்றஞ்சாட்டி இதனை கைவிட வேண்டும்.

ஏற்க மறுத்தால் கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்டி புதிய நீர் பாசன பகுதிகளை நாங்களும் விரிவாக்கம் செய்வோம் என பேசியதால் மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, ஆணையக் கூட்டம் குறித்து வெள்ளை அறிக்கையை ஆணைய தலைவர் வெளியிட வேண்டும். இதன் மூலம் தமிழக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு துணை போகிறதோ என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசாங்கம் சட்டத்திற்கு உட்பட்டு பாசன நீர் ஆதார உரிமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும். 

Related Stories: