10 நாளில் நான்கு பேர் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவை வாலிபர் மதன்குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் தோற்று தற்கொலை செய்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் என்ற மோகினிப் பிசாசின் பிடியிலிருந்து மீள முடியாத அந்த இளைஞர், தமது நண்பர்களிடமிருந்து கடன் வாங்கி சூதாடியிருக்கிறார். ஒரு கட்டத்தில் லட்சக்கணக்கில் கடன் சேர்ந்து விட்டதால், அதை சமாளிக்க முடியாமல் மதன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.. இது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் புதுச்சேரி, மதுரை மேலூர், சென்னை செம்பியம் ஆகிய இடங்களில் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்போது நான்காவது தற்கொலை நிகழ்ந்திருக்கிறது.  

ஆன்லைன் சூதாட்டம் என்ற தீமையை உடனடியாக தடுக்காவிட்டால் தற்கொலைகளும், அதனால் நடுத்தெருவுக்கு வரும் குடும்பங்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து விடும். எனவே, ஆன்லைன் சூதாட்டங்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது. அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: