தொழில் வழித்தடத்திற்காக வீடுகளை கையகப்படுத்துவது தொடர்பான உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தொழில் வழித்தடத்திற்காக வீடுகளை கையகப்படுத்துவது தொடர்பான உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான தொழில்வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிலம் கையகப்படுத்தும் நடைமுறையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அக்கியம்பட்டி என்ற கிராமத்தில் சில வீடுகள் உள்ள நிலத்தை கையகப்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு எடுத்தது.

இது தொடர்பாக நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அதிகாரி பிறப்பித்த உத்தரவையும், நெடுஞ்சாலைத்துறை பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்ய கோரி அந்த கிராமத்தை சேர்ந்த  9நபர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது; அரசு தரப்பில் மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்ட பிறகு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் அரசின் காலி நிலங்கள் நிறைய இருக்கும் போது  குடியிருப்பு பகுதிகளை இடிப்பது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்து பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் அரசு நிலத்தை செயல்படுத்தி திட்டத்தை செயல்படுத்தினால் திட்டத்தின் பாதை மாற்று பாதையாக மாறி விடும். எனவே தற்போது எடுக்கப்பட்ட நிலம் சரியான நடைமுறையில் தான் என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பி வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி; நிலம் கையகப்படுத்தும் அதிகாரி ஆட்சேபங்களை நிராகரிக்க முடியாது; ஆவணங்களை பொறுத்து அரசு தான் முடிவு செய்யும்.  தன் ஆயுட்கால முதலீடாக வீடு பறிபோகும் போது வேறு வீட்டை உருவாக்க முடியாத நிலை உள்ளது.

எனவே தொழில் வழித்தடத்திற்காக வீடுகளை கையகப்படுத்துவது தொடர்பான உத்தரவை ரத்து செய்து உத்தரவிடுவதாக கூறினார்.  எனவே இந்த நடைமுறையை புதிதாக மேற்கொண்டு 12 வார காலத்திற்குள் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக உரிய உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

Related Stories: