காஞ்சிபுரம் புதிய கலெக்டராக மகேஸ்வரி ரவிக்குமார் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டகலெக்டராக மகேஸ்வரி ரவிக்குமார், நேற்று பொறுப்பேற்றார். இதையடுத்து, அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள்  அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் கலெக்டராக பணியாற்றி வந்த பொன்னையா, கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி, காஞ்சிபுரத்துக்கு பணியிடம் மாற்றப்பட்டார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 62வது கலெக்டராக மகேஸ்வரி ரவிக்குமார், நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அனைத்து துறை அலுவலர்களும், மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட மகேஸ்வரி ரவிக்குமார், கிருஷ்ணகிரியில் முதல் முதலாக வருவாய் கோட்டாட்சியராக பதவி வகித்து, பின்னர் தருமபுரியில்  மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு பெற்று பணியாற்றினார். தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் துணை  ஆணையராகவும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: