அனைத்து மருத்துவமனைகளும் சி.டி.ஸ்கேன் விவரம் சமர்ப்பிக்க வேண்டும்: சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் எடுக்கப்படும், சி.டி.ஸ்கேன் விவரங்கள், அவர்களின் பாதிப்பு விவரங்களை, மாநில அவசர கால  கட்டுப்பாட்டு அறைக்கு தினந்தோறும் அனுப்ப வேண்டும். இதன் வாயிலாக, நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும். இவை, உயிரிழப்புகளை குறைத்து, கட்டுப்பாட்டு பகுதிகளை அதிகரிக்க உதவும். விவரம் தர மறுத்தால்,  அந்நிறுவனம் மீது, தொற்று நோய் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: