சபரிமலை மண்டல கால பூஜை ஆன்லைன் முன்பதிவு 1ம் தேதி தொடக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல கால பூஜைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 1ம் தேதி ெதாடங்குகிறது.கொரானா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன் ஐப்பசி மாத பூஜைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன், ஆன்லைனில் முன்பதிவு செய்த 250 பக்தர்கள் மட்டுமே தினசரி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 15ம் தேதி மாைல திறக்கப்படுகிறது. 16 முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகிறது. இது குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு கூறியதாவது:

* பூஜையின் ேபாது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1000 பக்தர்களும் சனி,  ஞாயிறு நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டல  பூஜை மற்றும் மகரவிளக்கு தினத்தில் 5  ஆயிரம் பக்தர்களையும் அனுமதிக்கப்படுவார்கள்.

* மண்டல பூஜையின் போதும் ஆன்லைனில் முன் பதிவு செய்து வரும்  பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

* ஆன்லைன் முன் பதிவு வரும் நவம்பர் 1ம் தேதி தொடங்குகிறது.

* முன்பதிவு செய்யும்போது கொரோனா நெகடிவ் சான்றிதழை இணைக்க தேவையில்லை.

* பத்தனம்திட்டா மாவட்டத்தில் பல இடங்களிலும் நிலக்கல், பம்பையிலும் கொரோனா பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* பம்பை, சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க முடியாது.

* சபரிமலையில் பணிக்கு வரும் அனைவருக்கும் கொரோனா சான்றிதழ் கட்டாயம்.

* சபரிமலைக்கு பக்தர்க்ளை பம்பையில் பக்தர்களை இறக்கிவிட்டு நிலைக்கலுக்கு வாகனங்களை கொண்டு செல்ல ேவண்டும்.

* பம்பை நதியில் குளிக்க அனுமதியில்லை. பம்பை ஆற்றின் கரையில் ஷவர் வசதி ஏற்படுத்தப்படும்.

* நிலக்கல், சன்னிதானம், பம்பையில் அன்னதானம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சான்றிதழ் கட்டாயம்

கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறுகையில், ‘‘மண்டல காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை கொண்டு வரவேண்டும். ெவளி மாநில பக்தர்கள் வந்த பின்னர் ேநாய் உறுதியானால் கேரளாவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு ெசய்யப்படும். இங்கு சிகிச்சை பெற விருப்பம் இல்லாவிட்டால் சொந்த ஊர் செல்ல வசதி ஏற்படுத்தப்படும்,’’ என்றார்.

Related Stories: