தீபாவளி நெருங்கும் வேளையில் சமையல் எண்ணெய் விலை கிடு, கிடு உயர்வு: பருப்பு விலையும் ஏகிறியது

சென்னை: தீபாவளி பண்டிகை வருகிற 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பலகாரங்கள் செய்ய பயன்படும் பொருட்களின் விலையும் உயர தொடங்கியுள்ளது. சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பாமாயில்(1 லிட்டர்) ரூ.70லிருந்து ரூ.95, சன்பிளவர் ஆயில் ரூ.85 லிருந்து ரூ.125, நல்லெண்ணெய் ரூ.180லிருந்து ரூ.240, கடலை எண்ணெய் ரூ.220லிருந்து ரூ.320 ஆகவும் உயர்ந்துள்ளது.மேலும் உளுந்தம் பருப்பு (கிலோ) மைதா ரூ.95லிருந்து ரூ.120, துவரம் பருப்பு ரூ.80லிருந்து ரூ.118, கடலைப்பருப்பு ரூ.56லிருந்து ரூ.74, பாசிப்பருப்பு ரூ.85லிருந்து ரூ.102 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இதே போல மைதா, ரவா, ஆட்டா விலையும் சற்று அதிகரித்துள்ளது.

மேலும் ஒரு சில மளிகை பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு சில மளிகை பொருட்களின் விலை அதே விலையில் விற்கப்பட்டு வருகிறது. தீபாவளி நெருங்க சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மளிகை வியாபாரிகள் கூறியுள்ளனர். ஏற்கனவே, மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறி விலை தினந்தோறும் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் தீபாபவளி நெருங்கி வரும் நிலையில் எண்ெணய், பருப்பு விலையும் உயர்ந்து வருவது இல்லத்தரசிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: